Aadhar Name change online |
How to change Name, Date of birth and Address online Tamil?
ஆதார் அட்டையில் திருத்தும் செய்வதில் புதிய செயல்முறை வந்துள்ளது. இதன்படி
வீட்டிலிருந்தே உங்களது தொலைபேசியில் அல்லது கணினியில் உங்களுடைய பெயர், முகவரி,
பிறந்த தேதி திருத்தங்களை நீங்களே செய்து கொள்ளலாம்.
நாம் ஆதாரில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து திருத்தம் செய்ய வேண்டும். ஆனால் இப்பொழுது இதை எளிமையாக்கும் வகையில் நீங்களே உங்கள் வீட்டிலேயே இதை திருத்தம் செய்ய எளிமையான முறையாக உள்ளது.
இந்த ஆன்லைன் சர்வீஸ் ஆதாரில் உள்ள உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி இவை மூன்றையும் ஒருமுறை மட்டுமே உங்களால் திருத்தம் செய்ய முடியும்.
உங்களுடைய தொலைபேசி எண் இணைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே நீங்களே உங்கள் ஆதார் அட்டையை திருத்தம் செய்யலாம்.
புதிய தொலைபேசி எண், உங்களுடைய புகைப்படம், புதிய ஆதார் சேர்த்தல் போன்ற சேவைக்கு உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்தை அணுக வேண்டியிருக்கும்.
எப்படி ஆன்லைனில் ஆதாரை திருத்தம் செய்வது? How to Aadhar card correction online Tamil
#1. My Aadhar update அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் -
https://myaadhaar.uidai.gov.in/
#2. My Aadhar Login என்பதைக் கிளிக் செய்யவும்.
#3. பிறகு உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். அதன் கீழ் உள்ள கேப்ட்சா
குறியீட்டை சரியாக உள்ளிடவும். அடுத்து Send OTP பாட்டனைக் கிளிக்
செய்யவும். உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு
OTP அனுப்பப் பட்டிருக்கும்.
#4. அடுத்து உங்கள் OTP-ஐ உள்ளிடவும்,Login என்பதைக் கிளிக் செய்யவும்.(பிறகு
மேலே வலது பக்கத்தில் உள்ள profile icon-னை கிளிக் செய்து உங்கள்
சுயவிவரத்தைச் சரிபார்க்கவும்)
#5. அடுத்து Update your Aadhaar கிளிக் செய்யவும். (உங்கள் ஆதாரின்
பெயர், DOB, பாலினம், முகவரி மற்றும் மொழித் தரவைப் புதுப்பிக்க இங்கே
கிளிக் செய்யவும்)
#5. அடுத்து புதுப்பிக்க பின்வரும் ஆதார் தரவு புலத்தில் ஏதேனும் ஒன்றைத்
தேர்ந்தெடுக்கவும்.
- பெயர்
- பிறந்த தேதி
- முகவரி
#6. மேலே உள்ள மூன்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் மாற்ற வேண்டும் என்றால்
அதை தேர்ந்தெடுத்து, பெயர் மாற்றம் என்றால் பெயர் மாற்றத்திற்கான
ஆவணம், பிறந்த தேதி என்றால் பிறந்த தேதிக்காண ஆவணம், முகவரி என்றால்
முகவரி மாற்றத்திற்கான ஆவணம்.
உதாரணமாக நீங்கள் உங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்றால்? How to
Aadhar card Name correction online tamil
பெயர் மாற்றத்திற்கான பக்கத்தில் உங்கள் திருத்தப்பட்ட வேண்டிய பெயரைச்
சரியாக உள்ளிடவும். (பெயர் மாற்றத்திற்க்கான ஆவணத்தில் உள்ள அதே பெயரை
உள்ளிடவும் - எடுத்துக்காட்டாக, ஆவணத்தின் பான் கார்டைத்
தேர்ந்தெடுத்தால் நீங்கள் பான் கார்டு அதே பெயரை உள்ளிடவும்)
#7. பிறகு நீங்கள் பெயர் மாற்றத்திற்கான ஆவணத்தை பதிவேற்றம் செய்யவும்
pdf file அல்லது புகைப்படமாக சேமித்து சரியான அளவில் தெளிவாக
இருக்குமாறு பதிவேற்றம் செய்யவும்.
பெயர் மாற்றத்திற்கு தேவையான ஆவணம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - click here
பிறகு, நீங்கள் பதிவு செய்த படிவத்தை சரிபார்க்க்கும் பக்கத்திற்கு
செல்லும். சரிபார்த்த பிறகு Next பொத்தானைக் கிளிக் செய்து, தொகையைச்
செலுத்தி, ஒப்புகை எண்ணைப் பெறுங்கள் (இந்த ஒப்புகை எண்ணைப்
பதிவிறக்கவும் அல்லது சேமிக்கவும்). 1 முதல் 2 வாரங்களுக்குப் பிறகு,
ஆதார் புதுப்பிப்பு நிலையைச் சரிபார்த்து, செயல்முறை முடிந்ததும்,
புதிய ஆதார் புதுப்பிப்பைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதேபோல் உங்கள் பிறந்த தேதி மற்றும் முகவரியை அதற்கான ஆவணத்தை கொண்டு
சரியான முறையில் பதிவிட்டு மாற்றம் செய்துகொள்ளலாம்.
இதில் உங்கள் ஆதார் update ஆகவில்லை என்றால் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று நீங்கள் ஆதார் அட்டை திருத்தம் செய்து கொள்ளலாம்.
இதில் உங்கள் ஆதார் update ஆகவில்லை என்றால் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று நீங்கள் ஆதார் அட்டை திருத்தம் செய்து கொள்ளலாம்.